பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது!
பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலிசார் கைது செய்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 3 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலாயுதம்பாளையம்: கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே பாலத்துறை சலவை காலனி அருகே சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அங்கு சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் வேலாயுதம்பாளையம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த பழனிசாமி (56) , பாலத்துறை சலவை காலனியை சேர்ந்த மாரிமுத்து( 64), வேலாயுதம்பாளையம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த முருகன்( 50), பாலத்துறை பகுதியை சேர்ந்த விஜயன்( 48) என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்து அவர்கள் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 3 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.