ஹைதராபாத்தில் தீ விபத்து..! 2 பெண்கள் உட்பட 7 பேர் பலி..மீட்பு பணிகள் தீவிரம்..
ஹைதராபாத்தில் பஜார்காட் நம்பல்லி பகுதியில் வேதிப் பொருட்கள் வைக்கும் குடோன் உள்ள பல அடுக்கு மாடி கட்டிடத்தில் திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் மெக்கானிக் ஒருவர் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. ஐந்து மாடி குடியிருப்பில் மெக்கானிக் கடைகளும் வீடுகளும் உள்ளது.
தரைதளத்தில் வேதிப் பொருட்கள் வைக்கும் குடோன் ஒன்று செயல்படுகிறது. வாகனம் ஒன்றை பழுது பார்த்துக் கொண்டிருக்கும் போது சிதறிய தீப்பொறி டீசல் கண்டெயினர் மேல் விழுந்து தீயானது பரவி விபத்து நிகழந்ததாக கூறப்படுகிறது. வேதிப் பொருள் உள்ள கிடங்கிலும் தீ பரவியது இதனால் கருப்பு புகை அப்பகுதி முழுவதும் பரவியது.
இதனால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக 2 பெண்கள் உட்பட 6 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீயணைப்பு துறை மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.