
ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 64 ஆவது போட்டியில் லக்னோவை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
ஜெய்ப்பூரில் 19 ஆவது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 64 ஆவது போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. இதில், ஜாஸ் இங்லிஸ் 60 ரன்களும் மிட்சல் மார்ஷ் 96 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து, 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில், சிறப்பாக விளையாடிய வைபவ் சூரியவன்ஷி 93 ரன்களும் துருவ் ஜுரேல் 53 ரன்களும் எடுத்து அசத்தினர்.



