இந்தியாவுக்கு அதிர்ச்சி தோல்வி: டி20 தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து!

Advertisements

சவுத்தம்டன் நகரில் நடைபெற்ற இந்தியா, இங்கிலாந்து இடையேயான 5 ஆவது மற்றும் கடைசி இருவது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் இந்தியா, இங்கிலாந்து இடையேயான 5 ஆவது மற்றும் கடைசி இருவது ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன் படி, முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 257 ரன்கள் என்ற இமாலய இலக்கை குவித்தது. இதில், அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 131 ரன்களும், ஹாரி புரூக் 95 ரன்களும் குவித்தனர். பந்து வீச்சு தரப்பில் ஷிவம் துபே 2 விக்கெட்களும், பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட்களையும் எடுத்தனர். இதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இதில், அதிகபட்சமாக இஷான் கிஷன் 56 ரன்களும், திலக் வர்மா 53 ரன்களும் எடுத்தனர். பந்து வீச்சு தரப்பில் சாம் கரன் 3 விக்கெட்களும், ஆதில் ரஷித் 2 விக்கெட்களையும் எடுத்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வழிவகைச் செய்தனர். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *