டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது….!

Advertisements

ஜெய்ப்பூரில் நடைபெற்ற 43 ஆவது ஐ.பி.எல். இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றிப் பெற்றுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 43 ஆவது ஐ.பி.எல். இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபேற்றது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகன் மோதின.

இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதன்படி, முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 225 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. இதில், அதிகபட்சமாக ரியான் பராக் 90 ரன்களும் டோனோவன் ஃபெரைரா 47 ரன்களும் குவித்தனர்.

பந்து வீச்சு தரப்பில் டெல்லி அணியின் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்களும், அக்சர் பட்டேல், நடராஜன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதன் பின்னர் களமிறங்கிய டெல்லி அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து அபார வெற்றிப் பெற்றது. இதில், அதிகபட்சமாக கே.எல்.ராகுல்  75 ரன்களும் பத்தும் நிசான்கா 62 ரன்களும் குவித்து டெல்லி அணியின் வெற்றிக்கு வழிவகைச் செய்தனர்.

இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி ஐ.பி.எல் கிரிக்கேட் தொடரில் தனது நான்காவது வெற்றியைப் பதிவுச் செய்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *