சாம்பியன்ஸ் டிராபிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

Advertisements

மும்பை:

8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.

‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச்.2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது.

இந்நிலையில் இந்தத் தொடருக்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நேரப்படி 2 மணியும் இந்திய நேரப்படி 1.30 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கும்.

துபாயில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. வரும் நாட்களில் இதுகுறித்து தகவல் கிடைக்கும் என்று ஐசிசி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளுக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ. 1000 ஆகும். பிரீமியம் வகை 1500 ரூபாயென நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் போட்டிக்கு நான்கு நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *