தாக்குதலை நிறுத்திய டிரம்ப்? உடனே மறுத்த ஈரான்..! பின்னணி என்ன..?

ஒப்பந்தம் முற்றிலும் தயாராகிவிட்டது போன்ற செய்திகள் யாவும் வெறும் ஊகங்கள் மட்டுமே என்று ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய்க்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் வலைத்தளப் பக்கத்தில் ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், எனவே அந்நாடு மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துவதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து, ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய்க்ஸ் பேசிய போது, ஒப்பந்தம் முற்றிலும் தயாராகிவிட்டது போன்ற செய்திகள் யாவும் வெறும் ஊகங்கள் மட்டுமே என்று தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை உரையின் பெரும்பகுதி இறுதி செய்யப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால், கடந்த சில நாட்களாக அமெரிக்கா தனது நிலைப்பாடுகளைத் தொடர்ந்து மாற்றி, வழக்கத்திற்கு மாறான சில சட்டவிரோத நிபந்தனைகளை விதிக்க முயல்கிறது என்று கூறினார். ஈரான் தனது சிவப்புக் கோடுகளை எந்தவொரு சூழலிலும் சமரசம் செய்து கொள்ளாது. மேலும், தங்களின் இறுதி முடிவு எடுக்கும் உயர்மட்டக் குழுக்கள் இன்னும் இதற்குப் பச்சைக்கொடி காட்டவில்லை எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *