Sri Vishnu Durga Temple: கோலாகலமாக நடந்த மண்டல பூஜை!

கள்ளக்குறிச்சியில் அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் ஐயப்பனுக்கு  11 ம் ஆண்டு மண்டல பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அண்ணா நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தின் சார்பாக ஸ்ரீ ஐயப்பனுக்கு பதினோராம் ஆண்டு மண்டல பூஜை ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகிகள் சார்பில் நடைபெற்றது.

முதலாவதாக ஐயப்பனை சன்னிதானத்திலிருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாகக் கோமுகி நதிக்கரைக்கு அழைத்துச் சென்று நீராடி அதனைத் தொடர்ந்து ஸ்ரீ ஐயப்பனுக்கு நெய்யபிஷேகம் பால் அபிஷேகம், தேன் அபிஷேகம், சந்தானம், விபூதி, இளநீர், உள்ளிட்டவைகளை அபிஷேகம் செய்து ஆராதனை காண்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அலங்காரம் செய்து கோமுகி நதிக்கரையிலிருந்து மேளதாளம் முழங்கக் கச்சேரி சாலை நான்கு முனை சந்திப்பு சேலம் சாலை ஆகிய வழிகளில் ஊர்வலமாகப் பொதுமக்களுக்கு ஐயப்பன் காட்சி தந்து மிகப் பிரமாண்டமாகப் பட்டாசு வெடித்தும் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய வரைக்கும் அழைத்துச் சென்றனர்.

அதனைத் தொடர்ந்து ஐயப்பனுக்கு மண்டல பூஜை படி பூஜை  செய்யப்பட்டது. சுமார் 1000 பேருக்கு ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகிகள்  பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *