இந்திய அணிக்கு கடினமான இலக்கு – டிரா செய்யுமா இந்தியா.!

Advertisements

குவகாத்தியில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற 522 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் தொடர்ந்து ஆடி வருகிறது.

அசாமின் குவகாத்தியில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்க அணி 489 ரன்களும், இந்திய அணி 201 ரன்களும் எடுத்தன. இரண்டாம் இன்னிங்சில் தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தபோது இன்னிங்சை முடித்துக்கொள்வதாக அறிவித்தது.

இதையடுத்து 549 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் இலக்குடன் விளையாடிய இந்திய அணி நான்காம் நாள் ஆட்டநேர இறுதியில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்துள்ளது. 8 விக்கெட்டும் இன்று ஒருநாள் ஆட்டமும் எஞ்சியுள்ள நிலையில் இந்திய அணி வெற்றிபெற மேலும் 522 ரன்களை எடுக்க வேண்டியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *