
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பிரியாணி சாப்பிட்ட பிறகு தர்ப்பூசணிப் பழம் தின்றதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கு .. என்ன நடந்தது?……விரிவா பார்க்கலாம்..
மும்பையிலே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இரவு பிரியாணி சாப்பிட்ட பிறகு தரப்பூசணிப் பழம் தின்ற நிலையில், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்குச் சிகிச்சை பயனின்றி அடுத்தடுத்து ஒவ்வொருவராக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கு. பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்த பிறகு தான் அவர்களின் மரணத்துக்கான காரணம் தெரியவரும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிரியாணி சாப்பிட்ட பிறகு தர்ப்பூசணிப் பழம் தின்பது உயிருக்கு ஆபத்தானது என்பதற்கு அறிவியல் ரீதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இருந்தாலும், இந்த இரண்டு உணவுகளையும் அடுத்தடுத்துச் சாப்பிடும்போது சிலருக்குச் செரிமானக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏன்னா, தர்ப்பூசணி மிக வேகமாகச் செரிமானமாகும் பழம். ஆனால், பிரியாணி என்பது அதிக எண்ணெய், மசாலா மற்றும் இறைச்சி போன்ற கனமான உணவு. இது செரிமானமாக நீண்ட நேரம் எடுக்கும்.
பிரியாணி செரிமானமாகிக் கொண்டிருக்கும் போதே விரைவாகச் செரிமானமாகக் கூடிய தர்ப்பூசணியைத் தின்னும்போது, அது வயிற்றில் தங்கிப் புளிக்க ஆரம்பிக்கலாம். இதனால் சிலருக்கு வயிறு உப்புசம், வாயு போன்ற அசௌகரியம் ஏற்படலாம். தர்ப்பூசணியில் 92 சதவீத நீர்ச்சத்தும், இயற்கையான சர்க்கரையும் உள்ளது. அதிகக் காரமான பிரியாணிக்குப் பிறகு குளிர்ந்த தர்ப்பூசணியை அதிக அளவில் சாப்பிடும்போது இலேசான வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புண்டு.
இது உயிருக்கு ஆபத்தா? என்று கேட்டால்…. கண்டிப்பாக இல்லை. ஆனால், செரிமானக் கோளாறு, சர்க்கரை நோய் அல்லது வயிற்றுப் பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்தச் சேர்க்கையைத் தவிர்க்கலாம். வயிற்றுப் பிரச்சனை வராம இருக்க, பிரியாணி சாப்பிட்ட பிறகு குறைந்தது ஒரு மணிநேரமாவது தர்ப்பூசணி மாதிரியான பழங்களை உட்கொள்ளாமல் இருப்பது உடலுக்கு நல்லதுனு சொல்கிறார்கள் மருத்துவர்கள்.




