திமுக தோல்விக்கு என்ன காரணம்? ஸ்டாலின் கைக்கு வந்த ‘ரகசிய’ அறிக்கை!

Advertisements

சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்விக்கான காரணங்கள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கள ஆய்வுக்குழு அறிக்கையை வழங்கியுள்ளது.

 சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்விக்கான காரணங்கள் குறித்து, கட்சித் தொண்டர்களிடம் கருத்துக் கேட்ட, கள ஆய்வுக்குழு அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியுள்ளது. அந்த அறிக்கையில், திமுக ஆட்சியில் இருந்தும் கூட்டுறவு சங்கத் தேர்தல், ஆவின் சங்க தேர்தலை நடத்தாததால் திமுகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர் என்றும் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கை எடுத்து கூறியபோது, மாவட்ட பொறுப்புகளில் இருந்தவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் அறிக்கையில் கூறியது போல் மகளிர் உரிமைத் தொகை கொடுக்காததால் பெண்கள் கடும் அதிருப்தியில் இருந்ததாகவும் திமுக கள ஆய்வுக்குழுவில் குறிப்பிட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *