Advertisements

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் ராஜினாமா
எஸ்.பி.வேலுமணி ஆதரவாக இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் ராஜினாமா..
மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா ஆகியோர் ராஜினாமா..
அதிமுக உட்கட்சி பூசல் மற்றும் தற்போதைய அரசியல் சூழல்களின் மாற்றங்கள் காரணமாகவே இவர்கள் இந்த அதிரடி முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் முக்கிய மாவட்டங்களைச் சேர்ந்த 3 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருப்பது பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிற்கு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது.
சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து 3 சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா கடிதத்தை வழங்கினர்.. எஸ்.பி.வேலுமணி ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 17 ஆக குறைந்தது…
Advertisements


