உழவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த ரூ.134.83 கோடி.. முதலமைச்சர் விஜய் அதிரடி!

Advertisements

உழவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக 134 கோடியே 83 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் குறுவை சிறப்புத் திட்டம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், உழவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக 134 கோடியே 83 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

டெல்டா மாவட்டங்களுக்கு 77 கோடியே 50 லட்சம் ரூபாயும், டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு 57 கோடியே 33 லட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். விவசாயிகளுக்குத் தடையில்லா மும்முனை மின்சாரம் நாளொன்றுக்கு 18 மணி நேரம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

குறுவை சாகுபடிக்கு 10 ஆயிரத்து 714 டன் நெல் விதைகள், 4 இலட்சம் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே, விவசாயிகள் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவிகளைப் பெற்றுப் பயனடையுமாறு முதலமைச்சர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *