ரோகித் – ரிக்கெல்டன் அதிரடி ….. மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி…!

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 47 ஆவது போட்டியில் லக்னோவை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் 19 ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 47 ஆவது போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது.
இதன்படி லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்தது. இதில், அதிரடியாக விளையாடிய நிக்கோலஸ் பூரன் 63 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 18 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 229 எடுத்து வெற்றி பெற்றது. இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய ரியான் ரிக்கெல்டன் 83 ரன்களும், ரோகித் சர்மா 84 ரன்களும் எடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *