IPL 2024: தேங்காய் உடைத்து பூஜையுடன் மும்பை அணியில் இணைந்த ஹர்திக் பாண்ட்யா!

Advertisements

சென்னையில் நடைபெற உள்ள தொடக்க லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்ளும் 17வது ஐ.பி.எல் சீசன் வரும் 22ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. சென்னையில் நடைபெற உள்ள தொடக்க லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

ஐ.பி.எல் தொடர் தொடங்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அனைத்து அணி வீரர்களும் தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக அந்தந்த அணிகள் சார்பில் சமூக வலைதள பதிவுகள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றன.

அந்த வரிசையில், மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது. 2024 ஐ.பி.எல். தொடரில் மும்பை அணி கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா களமிறங்க உள்ளார். இந்த நிலையில், ஐ.பி.எல். தொடரில் மீண்டும் மும்பை அணிக்குத் திரும்பியுள்ள ஹர்திக் பாண்ட்யா டிரெசிங் ரூமில் தேங்காய் உடைத்து, பூஜை செய்துள்ளார்.

இது தொடர்பான வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி தனது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *