Manu Bhaker: ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த மனு பாக்கர்…இந்தியர்கள் சோகம்!

Advertisements

Manu Bhaker: பாரிஸ் ஒலிம்பிக்கில் 25மீட்டர் பிஸ்டல் பிரிவில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை, மனு பாக்கர் இழந்தார்,

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33வது ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்திய வீராங்கனை மனு பாக்கர் இந்தப் போட்டியில் நான்காவது இடத்தைப் பிடித்தார்.

Manu Bhaker: பாரிஸ் ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் பதக்கம் வெல்லும் வாய்ப்பை, இந்திய துப்பாக்கிச் சுடும் வீராங்கனை மனு பாக்கர் இழந்தார். 25 மீட்டர் பிஸ்டர் பிரிவின் தனிநபர் இறுதிப் போட்டி வர முன்னேறினாலும், முதல் மூன்று இடங்களைப் பிடிக்க முடியாமல் தோல்வியைத் தழுவினார். இந்தப் போட்டியில் அவர் நான்காவது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. முன்னதாக 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. ஹாட்ரிக் பதக்கத்தைக் கைப்பற்றுவாரென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மனுபாக்கர் தோல்வியுற்றது இந்தியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *