POCSO Act: தகாத உறவால் குழந்தை பெற்ற சிறுமி!

Advertisements

சிறுமியைக் கர்ப்பமாக்கிய வாலிபர்மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள தெருவில் குழந்தை அழும் சத்தம் கேட்டு அந்தத் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். திருவல்லிக்கேணி போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டு கஸ்தூரிபாய் அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாகச் சேர்த்தனர்.

போலீஸ் நடத்திய விசாரணையில், அந்தக் குழந்தையைத் தெருவில் வீசிச் சென்ற தாய் அருகில் உள்ள விடுதியில் தங்கி இருப்பது தெரியவந்தது. குழந்தையைப் பெற்றெடுத்தது 17 வயது சிறுமி என்பதும் கண்டறியப்பட்டது. அந்தச் சிறுமியின் பெற்றோர் கண்பார்வையில்லாத மாற்றுத்திறனாளிகள். மதுரையை சேர்ந்தவர்கள். அங்கு வாலிபர் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்ட 17 வயது சிறுமி கர்ப்பம் அடைந்தார்.

இந்த விசயம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று கருதிய பெற்றோர், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தங்களது மகளைச் சென்னைக்கு அழைத்து வந்தனர். திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்தபோது பிரசவ வலி ஏற்பட்டு சிறுமி ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். பின்னர் சத்தம் இல்லாமல் அந்தக் குழந்தையைத் தெருவில் வீசிவிட்டனர்.

திருவல்லிக்கேணி போலீசார் தற்போது அந்தச் சிறுமியையும், அவர் பெற்றெடுத்த குழந்தையையும் எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். சிறுமியைக் கர்ப்பமாக்கிய வாலிபர் மதுரையில் வசிக்கிறார். அவர்மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *