
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 72-வது உலக அழகி போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிகள் மே மாதம் 7-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை 4 வாரங்கள் நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு மும்பை மற்றும் டெல்லியில் உலக அழகி போட்டிகள் நடைபெற்றுள்ளன.
இந்தப் போட்டி நாட்டில் 3-வது முறையாகத் தெலுங்கானாவில் நடைபெறுகிறது.
உலகம் முழுவதும் 140 நாடுகளைச் சேர்ந்த இளம்பெண்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் புதிய மாநிலமாக உருவான தெலுங்கானா வேகமாக முன்னேறி வருகிறது. உலக அழகி போட்டி நடைபெறுவதால், தெலுங்கானா மற்றும் ஐதராபாத் பெருநகர பகுதி உலகளவில் பிரபலமாகும். இந்தப் போட்டிகளை மிஸ் வேர்ல்ட் அமைப்பு, தெலுங்கானா சுற்றுலா துறையுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
தொடக்கம் மற்றும் நிறைவு விழா போட்டிகள் ஐதராபாத்தில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
