Indian 2000-Rupee Note: ரூ.2,000 நாளையுடன் டாடா பை பை..!

ரூ.2,000 நோட்டுக்களை மாற்றுவதற்கான கால அவகாசம் நாளைச் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. கடந்த மே மாதம் இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2,000 நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்தது.

இதனைச் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வங்கிகளில் செலுத்தி மாற்றிக் கொள்ளவும், டெபாசிட் செய்யவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. 4 மாத கால அவகாசம் நாளையுடன் முடிவுக்கு வருகிறது.

இதனையொட்டி, பேருந்துகள், பெட்ரோல் பங்குகள், ஹோட்டல்கள் என எங்கும் ரூ.2,000 நோட்டுக்கள் வாங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 36 மணி நேரம் மட்டுமே உள்ளதால் இந்த நோட்டுக்களை உடனே மாற்றி விடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *