
குழந்தைகளுக்குப் பிடித்த மீன் புட்டு.
பொதுவாக மீன் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். மீன் மிகவும் பிடித்தாலும் அதனை வாங்குவதற்கு தயங்குவார்கள். காரணம் மீனில் அதிகம் முள்கள் இருக்கும் என்ற பயத்தில் அதனை வாங்க மருத்துவர்கள். அதனை மீறி வாங்கினாலும் பெரியவர்கள் அதனைச் சாப்பிட்டுவிடுவார்கள் ஆனால் குழந்தைகளுக்கு அதனை எடுத்துச் சரியாகச் சாப்பிட முடியாது. அதனால் சாப்பிடாமல் விடக் கூடாது காரணம் மீன் அதில் அதிகப்படியான நன்மைகள் உள்ளது. இப்போது குழந்தைகளுக்குப் பிடித்தமான மீன் புட்டு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.!
மீன் புட்டு செய்யத் தேவையான பொருட்கள்:

தேவையான அளவு மீன்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/4 ஸ்பூன்
வெங்காயம் – 2 சின்னதாக நறுக்கியது
இஞ்சி – பெரியதாக நசுக்கியது
பூண்டு – 2 பல்
பச்சை மிளகாய் – 2
கருவேப்பிலை – ஒரு கொத்து
மல்லித்தூள் – 1/2 ஸ்பூன்
சீரகத்தூள் – 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
தேவையான அளவு உப்பு
மிளகு தூள் – காரத்திற்கு தேவையானது.
மீன் புட்டு செய்முறை:
முதலில் நறுக்கிய மீனை எடுத்து ஒரு கடாயில் உப்பு 1 ஸ்பூன், மஞ்சள் தூள் சேர்த்து கலந்து அதனைத் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். வெந்த பின் அதனைத் தனியாக முள் இல்லாமல் எடுத்துக்கொள்ளவும் சிறிய துண்டாக உதிர்த்து எடுத்துக்கொள்ளவும்.
இன்னொரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு சேர்த்து கடுகு பொரிந்ததும் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், கருவேப்பில்லை சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வதங்கியபின் அதில் மல்லித்தூள் – 1/2 ஸ்பூன், சீரகத்தூள் – 1/2 ஸ்பூன், மிளகாய் தூள் -1 ஸ்பூன், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.
கலந்த பின் கடைசியாக உதிர்த்து எடுத்து வைத்த மீனை அதில் சேர்த்து நன்கு சேர்த்துவிடவும். கொஞ்சம் நேரம் நன்றாகக் கிளறி வேகவிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.


