Watermelon Syrup: தர்பூசணி சிரப் எப்படி செய்யலாம் தெரிந்துகொள்ளுங்கள்!

Advertisements

வெயில் காலம் தொடங்கி விட்டது என்பதால், கலர்கலரான சர்பத் வீதிகளில், வண்டிகளில் வைத்து விற்கப்படும். சிலருக்கு அந்த வண்ணங்களைப் பார்க்கும்போதே அதை வாங்கி குடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், ஆரோக்கியத்துக்கு கேடு என்பதால், அதை வாங்கி குடிக்காமலேயே விட்டுவிடுவார்கள்.

குழந்தைகள் கேட்டாலும் வாங்கித் தரமாட்டார்கள். சிலர் பெரிய பெரிய கடைகளில் விற்கும் சர்பத் சிரப்புகளை வாங்கி, பிரிட்ஜில் வைத்து, அந்தச் சர்பத் சிரப்பை பயன்படுத்தி, வீட்டிலேயே ஜூஸ் தயாரித்து குடிப்பார்கள். இருந்தாலும் அந்தச் சிரப்புகளிலும் கண்டிப்பாக, கெட்டுப்போகாமல் இருக்க, கட்டாயம் ரசாயன பொருட்கள் கலந்து தான் இருக்கும்.

நம்முடைய ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள, நாமே நம்முடைய வீட்டில் ஜூஸ் செய்வதற்கு தேவையான சர்பத் சிரப்பை தயாரித்து வைத்துக் கொண்டால்! எவ்வளவு நன்றாக இருக்கும். அந்தச் சிரப் ஒரு வருடம்வரை கெட்டுப் போகாமல் இருக்கும் என்றால் இன்னும் சந்தோஷமான விஷயம் தானே! நீங்களும் கெட்டுப்போகாமல் இருக்கும் அந்தச் சர்பத் சிரப்பை எப்படி தயாரிக்க வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டுமா? தாராளமாகத் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தர்பூசணி சிரப் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
தர்பூசணி        – ஒரு தர்பூசணியில் பாதி எடுத்துக் கொண்டால் போதும்
சர்க்கரை         – 1 1/2 கிலோ லெமன் சால்ட் – 1/2 ஸ்பூன்

ஒரு முழு தர்பூசணியில் பாதி அளவு தர்பூசணியை தோலிலிருந்து தனியாக எடுத்து, அதை மிக்ஸியில் போட்டு அறைத்து வடிகட்டிச் சாறை எடுத்துக் கொள்ளலாம்.  மத்துக்காம்பால் வைத்து இடித்தும், சாறை தனியாகப் பிரித்து எடுத்துக் கொள்ளலாம். உங்கள் இஷ்டம் தான். ஆனால் அதில் உள்ள கொட்டைகள் மையக் கூடாது. பாதி அளவு தர்பூசணி பழத்திலிருந்து பிழிந்து சாறை எடுத்தாலே 1 லிட்டர் அளவு சாறு கிடைக்கும். இந்த ஒரு லிட்டர் அளவு தர்பூசணி பழச்சாறோடு 1 1/2 கிலோ சர்க்கரையை சேர்த்து நன்றாகக் கரைத்து விட்டு, அதன் பின்பு ஸ்டவ்வில் வைத்து, மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். பத்து நிமிடங்கள் கொதித்த பின்பு 1/2 ஸ்பூன் லெமன் உப்பு சேர்த்து,

மீண்டும் 10 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். மொத்தமாக இந்தச் சாறை 20 நிமிடங்கள்வரை கொடுத்தால் போதும். கொதிக்கும்போது, இடையிடையே கரண்டியை வைத்து இந்தக் கலவையைக் கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும். அடிபிடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. 20 நிமிடங்கள் கழித்து இந்தக் கலவையை அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து, நன்றாக ஆறிய பின்பு, மீண்டும் வடிகட்டி ஒரு பாட்டிலில் சேமித்து பிரிட்ஜில் வைத்து விட்டால் தர்பூசணி சிரப் தயார்.

(அடுப்பிலிருந்து கீழே இறக்கும்போது இந்தச் சிரப் தண்ணீர் பதமாகத்தான் இருக்கும் நன்றாக ஆறிய பின்பு தான் எசன்ஸ் தன்மைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.) தர்பூசணி ஜூஸ் தயாரிக்கும் முறை: ஒரு டம்ளர் தண்ணீரில், 2 டேபிள்ஸ்பூன் நீங்கள் தயாரித்த தர்பூசணி சிரப்பை ஊற்றி, 4 ஐஸ் கட்டிகள் போட்டுப் பாதி எலுமிச்சை பழ ஜூஸை பிழிந்து விட்டாலே போதும். சுவையான, ஆரோக்கியமான, கலரான தர்பூசணிசர்பத் ரெடி. பயப்படாமல் இதைக் குழந்தைகளுக்குக் கூடக் கொடுக்கலாம். ஆரோக்கியமானது தான்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *