வாக்காளர் திருத்தத்தில் தமிழ்நாட்டில் எந்த குறைப்பாடும் இருக்காது – கனிமொழி.!

வாக்காளர் சிறப்புத் திருத்தத்தில் மற்ற மாநிலங்களில் ஏற்பட்ட குறைபாடு தமிழ்நாட்டில் இருக்காது என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் பேரிடர்க் காலத்தில் பொதுமக்கள் தங்குவதற்கான பாதுகாப்பு மையக் கட்டடம், மாதிரிப் பள்ளி ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநகராட்சி மேயர் ஜெகன், கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, வாக்காளர் சிறப்புத் திருத்தத்தில் பிற மாநிலங்களில் ஏற்பட்ட குறைபாடு தமிழ்நாட்டில் இருக்காது என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *