PM Modi:உலகளாவிய மத்தியில், நம்பிக்கை ஒளியாக இந்தியா உள்ளது..பிரதமர் மோடி பெருமிதம்!

Advertisements

புதுடில்லி: ‘பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில், நம்பிக்கை ஒளியாக இந்தியா உள்ளது,’ எனப் பிரதமர் மோடி தெரிவித்தார்.

டில்லியில் நடந்த தனியார் ‘டிவி’ நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா அனைத்து துறைகளிலும் செயல்பட்டு வருகிறது. இது முன்னெப்போதும் இல்லாத அளவில், சென்று கொண்டிருக்கிறது. பல்வேறு கவலைகளில், மூழ்கியுள்ள உலகிற்கு இந்தியா நம்பிக்கை அளிக்கிறது. நாங்கள் 3வது முறையாக, ஆட்சி அமைத்து, 125 நாட்கள் முடிவடைந்துள்ளது. ரூ.9லட்சம் கோடி மதிப்பிலான கட்டமைப்புத் திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன.

15 புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. சென்செக்ஸ் மற்றும் நிப்டி 125 நாட்களில் 6 முதல் 7 சதவீதம் உயர்ந்துள்ளது. அந்நிய செலவாணி 700 பில்லியனுக்கு மேல் அதிகரித்துள்ளது. 9 விமான நிலையங்கள் கட்டுமானம் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சி, முதலீடுகுறித்து உலகம் உற்சாகம் அடைந்துள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பைப் பார்த்து உலகம் வியக்கிறது.

வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரங்கள், வேலையின்மை மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பல உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாகத் திகழ்கிறது. உலக அளவில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமாக இருக்கிறது.

உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் இந்தியா வேகமாக வளர்ந்து வருவது பற்றி மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்தியாவின் பொருளாதாரம் , 1 டிரில்லியன் டாலர் ஜி.டி.பி.,யை எட்ட 63 ஆண்டு ஆனது. ஆனால் 2 டிரில்லியன் டாலரை எட்டுவதற்கு ஏழு ஆண்டுகள் மட்டுமே ஆனது. 2020ம் ஆண்டில் 3 டிரில்லியன் டாலராக அதிகரித்தது. உலகின் 11வது பொருளாதாரமாக இருந்த இந்தியா, பத்தாண்டுகளில் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் என்ற இடத்துக்கு முன்னேறி உள்ளது.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *