Karnataka Bandh: தொடரும் 144 தடை உத்தரவு.!

Karnataka Bandh: காவிரியில் இந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கக் கூடாது என வலியுறுத்திக் கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகா, தமிழ்நாடு எல்லைவரை மட்டுமே தமிழக அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கடந்த 26ஆம் தேதியும் பெங்களூருவில் பந்த் நடைபெற்ற நிலையில், இன்று கர்நாடகா முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடக்கிறது. அன்று நடைபெற்ற போராட்டத்தின்போது கர்நாடகாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்திற்கு மாலை அணிவித்து, பாடை கட்டி இறுதிச்சடங்கு செய்வது போல் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *