கேப்டன் விஜயகாந்த்தால் தொடங்கப்பட்ட தேமுதிக தமிழ்நாட்டில் தற்பொழுது ஒரு முக்கிய கட்சியாக பார்க்கப்படுகிறது. இந்த கட்சியை பொறுத்தவரையில் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு மிகப்பெரிய அனுதாப அலை வீசுகிறது. அது மட்டுமல்லாமல் கட்சியின் பொதுச் செயலாளரான பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து தேமுதிகவை மிக தீவிரமாக வழி நடத்தி செல்கிறார் .
அந்த வகையில் அதிமுக பாஜக தமிழக வெற்றி கழகம் என கூட்டணிக்கு பல தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் பிரேமலதா விஜயகாந்த் எந்தவிதமான முடிவுக்கும் வரவில்லை . தற்பொழுது இறுதிக்கட்டமாக திமுகவுடன் கூட்டணி என்பது உறுதியான செய்தியாக வெளியே கசிந்து இருக்கிறது .
பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக வருகிற சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்க போகிறது என்பது கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பேசும் பொருளாகி இருக்கிறது . ஏற்கனவே கடந்த தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்திருந்தது. அதன் பின்னர் , தற்பொழுது தாங்கள் கோரிக்கை விடுத்தபடி ராஜ்யசபா சீட் தரவில்லை என அதிமுக மீது குற்றம் சாட்டினார் பிரேமலதா விஜயகாந்த் .
இதனைத் தொடர்ந்து, வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைக்கலாமென அவர் திரை மறைவில் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது இதற்கு காரணம் அதிகப்படியான தொகுதிகளையும் தேர்தல் செலவினங்களையும் தேமுதிக தரப்பில் கோரிக்கையாக வைத்தனர் . இதற்கு தமிழக வெற்றி கழகம் சம்மதம் தெரிவிக்கவில்லை .
இந்த நிலையில், சூழ்நிலையை புரிந்து கொண்ட அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் ஒருவர் மூலம் பிரேமலதா விஜயகாந்த்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது . அப்பொழுது வருகிற தேர்தல் முடிவடைந்த நிலையில் கண்டிப்பாக ராஜ்ய சபா சீட்டு வழங்குவோம் என தெரிவிக்கப்பட்டது இருந்தபோதிலும் பிரேமலதா விஜயகாந்த் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை .
இந்த சூழ்நிலையில், டெல்லி பாஜக மகளிடம் தேமுதிகவை எப்படியும் கூட்டணிகள் சேர்க்க வேண்டும் என முடிவு செய்தது . அதன்படி எடப்பாடி பழனிச்சாமி இடம் ஆலோசனை நடத்திய நிலையில் தேமுதிக விடமும் ஆலோசனை நடத்தப்பட்டது . இதில் 15 தொகுதிகள் ஒதுக்கப்படும் எனவும் தேர்தல் செலவை ஏற்றுக் கொள்வதாகவும் சொல்லப்பட்டது .
இந்த நிலையில், பாஜக மேல் இட பார்வையாளர் மத்திய மந்திரி பியூஸ் கோயல் சென்னை வந்த நிலையில் தேமுதிக விற்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கலாம் என முடிவு செய்யப்பட்டது . இந்த தகவல் வெளியே கசிந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த் மிகவும் கொந்தளித்து போனார். தேமுதிக என்பது மிகவும் வலுவான கட்சி எங்களுக்கு ஆறு தொகுதிகள் என்பது மிகவும் குறைவு என குரல் கொடுத்த பிரமலதா விஜயகாந்த் திரை மறைவில் தேர்தல் செலவை வேறு யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டது .
இந்த நிலையில், பிரேமலதா விஜயகாந்த் தனது முக்கிய சகாக்களுடன் ஒரு ஆலோசனை நடத்தினார் . இதற்கிடையே சூழ்நிலையை நன்கு புரிந்து கொண்ட திமுக தரப்பில் தேமுதிகவை கட்சியில் இணைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது . உடனடியாக இது தொடர்பாக திமுக அமைச்சர் ஒருவர் பிரேமலதா விஜயகாந்த்தை சந்தித்து ஒரு மணி நேரம் பேசியிருக்கிறார் .
இந்த பேச்சுவார்த்தையின் போது ஏழு தொகுதிகளும், ராஜ்யசபா சீட்டும் தருவதாக திமுக தரப்பில் வாக்குறுதி தரப்பட்டு இருக்கிறது மேலும் தேர்தல் செலவுகளை தாங்களே ஏற்றுக்கொள்வோம் என்றும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . இது மட்டுமல்லாமல் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட ஒரு தொகுதியும் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட ஒரு தொகுதியும் ஒதுக்கி தருவதாக சொல்லப்பட்டு இருக்கிறது .
இதனிடையே கேப்டன் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வோம் என பிரேமலதா விஜயகாந்த்தை வற்புறுத்தி வருகிறார் . இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதிமுக, பாஜக . தவெக ஆகிய கட்சிகளில் இணைய வாய்ப்பில்லாத நிலையில் தற்போது திமுகவில் இணைந்து விடலாம் என பிரேமலதா விஜயகாந்த் முடிவெடுத்து விட்டதாக சொல்கிறார்கள் .
இன்னும் நான்கு தினங்களில் இதற்கான இறுதி முடிவுகள் எட்டப்பட்டு விடும் என தெரிகிறது . எனவே வருகிற ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி கடலூரில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்ட மேடையில் தேமுதிக திமுக கூட்டணி பற்றி பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார் என தெரிகிறது .
இதன் நிமித்தமாகத்தான் தற்பொழுது பிரேமலதா விஜயகாந்த் திமுக தரப்பில் எந்த வித குற்றச்சாட்டுகளையும் கூறி பொது மேடையில் பேசுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

