Seeman : அனகாபுத்தூரில் வீடுகளை கையகப்படுத்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்!

Advertisements
சென்னை அனகாபுத்தூரில் வீடுகளை கையகப்படுத்தும் முடிவை தமிழக அரசு  கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக  அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்  சென்னை அனகாபுத்தூர் பகுதியில் அமைந்துள்ள 750 வீடுகளை இடித்து, அங்கு வசிக்கும் 3500க்கும் மேற்பட்ட மக்களை திமுக அரசு வெளியேற்ற முயல்வதாக தெரிவித்தார். மேலும் குடியிருப்புகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து   போராடிய மக்களை  போலீசார் கைது செய்து இருப்பது திமுக அரசின் மனிதநேயமற்ற கொடுஞ்செயல் என்று  குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து அனகாபுத்தூர் பகுதியில் வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்கள் வெளியேற்றப்படுவதை தமிழக அரசு  நிறுத்த வேண்டும் என்று கூறினார், மேலும் வீடுகள் இடிக்கும் திட்டத்தை நிரந்தரமாக கைவிட வேண்டும் என்று  சீமான் தெரிவித்துள்ளார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *