
இந்தியா, சீனா உறவில் விரிசலை ஏற்படுத்தவும், இரு நாடுகளிடையே பகைமையைத் தூண்டவும் அமெரிக்கா முயற்சிப்பதாகச் சீன வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடா்பாளா் குற்றம் சாட்டியுள்ளார்.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் லின் ஜியான் செய்தியாளா்களைச் சந்தித்து பேசினார். அப்போது, அவர் அமெரிக்க அறிக்கை, சீனாவின் பாதுகாப்புக் கொள்கையைத் தவறாகச் சித்திரிக்கிறது என்றார்.
மேலும், மற்ற நாடுகளுடன் சீனா கொண்டுள்ள சுமுகமான உறவில், அமெரிக்கா விரிசலை ஏற்படுத்த முயற்சிகிறது என்று கூறினார். இதைத்தொடர்ந்து, சீனா எப்போதும் இந்தியாவுடனான உறவை நீண்ட காலத் திட்டத்தோடும், முக்கியத்துவம் வாய்ந்த வியூகத்தோடும் அணுகி வருகிறது.
ஆனால், தற்போது இந்தியா, சீனா எல்லை விவகாரம் மிகவும் சீராக உள்ளது. எனவே, இது இரு நாடுகளுக்கும் இடையிலான தனிப்பட்ட விஷயம். இதில் சம்பந்தமில்லாத மூன்றாவது நாடான அமெரிக்கா, தேவையற்ற கருத்துகளைத் தெரிவிப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம் என்று தெரிவித்தார்.



