
நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கும் நிலையில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் பரபரப்பாக இருக்கின்றது. கருத்து கணிப்புகள் எல்லாம் வெளியாகி இருந்தாலும் மக்களின் தீர்ப்பை எதிர்நோக்கி அனைவரும் இருக்கின்றனர். கருத்து கணிப்புகள் கலவையான முடிவுகளை கொடுத்திருப்பதால் மக்களிடையே குழப்பமான மனநிலை உள்ளது. இந்த தேர்தலில் உறுதியாக யாரும் வெற்றிபெறுவார்கள் என அடித்து சொல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருக்கின்றது.
இந்த பரபரப்பான சூழலில் , வாக்கு எண்ணும் மையங்களில் பாஜக சதி செய்ய இருப்பதாக தகவல் வருகிறது எனவும், பாஜகவின் B-Team ஆக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது, எனவே வாக்கு எண்ணும் மையங்களில் புகார் வரும் போது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல்களை தற்பொழுது விரிவாக பார்க்கலாம்..
திமுக -அதிமுக -தவெக என இம்முறை மும்முனை போட்டி நிலவி வருவதால் யாருக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காது என்ற கருத்துக்களும் வருகின்றன. இந்நிலையில் வாக்கு எண்ணும் மையங்கள் எல்லாம் தயார் நிலையில் இருக்கும் இந்த சமயத்தில் தலைமை தேர்தல் அதிகாரி வாக்கு எண்ணும் மையங்களில் இருப்பவர்களிடம் கடைசி கட்ட ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றார். நேற்றே அவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு சந்தேகங்களை போக்கிய அர்ச்சனா பட்நாயக் தற்போது மீண்டும் ஆலோசனை நடத்தி வருகின்றார்.
இதற்கிடையில், வாக்கு எண்ணும் மையங்களில் பாஜக சதி செய்ய இருப்பதாக தகவல் வருகிறது எனவும், பாஜகவின் B-Team ஆக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது, எனவே வாக்கு எண்ணும் மையங்களில் புகார் வரும் போது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் , திமுக எதையும் சந்திக்க தயாராக உள்ளது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய அவர், நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி ஆகிவிட்டது. அனைத்து தரப்பு மக்களும் தளபதி தான் இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க போகிறார் என்ற கருத்து தெரிவித்து வருகிறார்கள் என தெரிவித்தார்.
பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஏதேனும் வாக்கு எண்ணும் மையத்தில் திட்டமிட்டு ஏதேனும் செய்ய உள்ளார்கள் என்ற சமூக ஊடகங்களில் வருகிற செய்தியை அடிப்படையாக கொண்டு வரும் சந்தேங்களின் அடிப்படையில் எந்த புகார் வந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம். புகார் வரும் போது நடவடிக்கை எடுக்கிறன் என கூறுவார்கள் ஆனால் மாலை வரை எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள் அதனால் தான் முன்கூட்டியே கடிதம் எழுதி உள்ளோம் என கூறினார்.
இரண்டு ஆண்டுகளாக SIR உள்ளிட்ட பல பணிகளில் திமுக கூட்டணிகள் இணைந்து சிறப்பாக பணியாற்றி உள்ளார்கள். அதனை கெடுக்கும் நோக்கில் பாஜகவினர் எந்த எல்லைக்கும் செல்வார்கள் எனவும் தேர்தல் ஆணையம் பாஜகவின் B டீமாக செயல்படுகிறது எனவும் தெரிவித்தார். திமுக எதையும் சந்திக்க தயாராக உள்ளது. பொதுவாக வாக்கு எண்ணும் மையங்களில் எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் வர கூடாது என தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம்” என தெரிவித்தார்..
இதற்கிடையில், அரசியல் கட்சிகள் பல , தேர்தல் ஆணையத்திற்கு பல கோரிக்கைளை வைத்து வருகிறார்கள்..
அந்த வகையில் , தமிழக வெற்றி கழகம் சார்பிலும் , வாக்கு எண்ணும் நாளில் , வாக்கு எண்ணும் மையங்களைச் சுற்றிய பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றும் , வாக்கு எண்ணும் மையங்களிலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவில், அதிகாரப்பூர்வ அனுமதி பெற்றவர்களைத் தவிர மற்ற எந்தக் கட்சி நிர்வாகிகளையும் அல்லது தொண்டர்களையும் அனுமதிக்கக் கூடாது என்றும் தவெக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளனர்..
இந்நிலையில் , பொதுவாக தேர்தல் ஆணையம், வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி 100 மீட்டர் வரையே பாதுகாக்கப்பட்ட பகுதி Pedestrian zone – ( பெடெஸ்ட்டீயன் zone ) என அறிவிக்கும். தவெக கோரியுள்ள 1 கிலோமீட்டர் சுற்றளவு என்பது நடைமுறைச் சிக்கல்கள் கொண்டதாகக் கருதப்படுவதால், இது குறித்து ஆணையம் இன்னும் இறுதி முடிவை அறிவிக்கவில்லை.



