“நவீன இந்தியாவின் அடித்தளம் நேரு” – ராகுல் காந்தி புகழாரம்.!

இந்தியாவைக் கட்டமைப்பதற்காக முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தில்லியில் உள்ள சாந்தி வனத்தில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 62 ஆவது நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதுதொடர்பாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், நாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தில், அவருக்குத் தனது நெஞ்சார்ந்த அஞ்சலியைச் செலுத்தியதாகத் தெரிவித்தார். நவீன இந்தியாவின் வலுவான அடித்தளத்தை அமைத்ததோடு மட்டுமன்றி, உள்ளடக்கிய, இணக்கமான மற்றும் முற்போக்கான இந்தியாவைக் கட்டமைப்பதற்காக அவர் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தாகக் கூறினார்.

சுதந்திரம், ஜனநாயகக் கோட்பாடுகள், அரசியலமைப்பு உரிமைகள், சமூக நீதி மற்றும் அறிவியல் பூர்வமான பார்வை ஆகியவற்றில் வேரூன்றிய அவரது தொலைநோக்குத் தலைமை, நமக்கு என்றும் வழிகாட்டியாக விளங்கும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *