பக்ரீத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து – முதலமைச்சர் விஜய்.!

பக்ரீத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தமிழக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் விஜய் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ஈகைத் திருநாளாம் பக்ரீத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இறைநம்பிக்கை, தியாகம், கருணை, பகிர்வு, மனிதநேயம் ஆகிய உயரிய விழுமியங்களை மனிதகுலத்திற்கு உணர்த்தும் புனிதப் பெருநாளாக பக்ரீத் திகழ்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏழை, எளிய மக்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் பக்ரீத் திருநாளில் சமுதாயத்தில் மனிதநேயமும் மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்கிட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *