Annamalai:பா.ஜனதா தலைமையில் மாமன், மச்சான் கூட்டணி!

மாமன், மச்சான் கூட்டணி என்பது வேற்றுமையில் ஒற்றுமை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை:தமிழக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, “தமிழகத்தில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. பங்காளி கட்சிகள் தான். ஆனால் அந்த பங்காளிகளுடன் நாங்கள் ஒருபோதும் சேரப் போவது கிடையாது. கருணாநிதிக்கு கும்பிடு போடுவது தவறில்லை, காலில் விழுவது தான் தவறு. என் மீது போடப்பட்ட வழக்கு இதுவரை தி.மு.க. தரப்பில் வாபஸ் பெறவில்லை. எதிர் துருவமாக இருந்து தி.மு.க., பா.ஜ.க. அரசியல் செய்கிறது. பா.ஜ.க. தலைமையில் மாமன், மச்சான் கூட்டணி அமைக்கப்படும். மாமன், மச்சான் கூட்டணி என்பது வேற்றுமையில் ஒற்றுமை” என்று அண்ணாமலை கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கூட்டணிக்கு வந்தால் ஏற்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “அவரும் மாமன் மச்சான் தான்” என்று கூறினார்.

நடிகர் விஜய்-உடன் கூட்டணி அமைப்பதை மாமன், மச்சான் கூட்டணி என்று அண்ணாமலை கூறியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *