விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு கூடுதலாக 25 லட்சம் ரூபாய்  நிவாரணம் – டாடா குழுமம்  

ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு கூடுதலாக 25 லட்சம் ரூபாய்  நிவாரணம் வழங்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிறுவனமான டாடா குழுமம்  அறிவித்துள்ளது.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து கடந்த   12 ஆம் தேதி புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானது. புறப்பட்ட சில நிமிடங்களில் விமான நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி மீது விமானம் விழுந்து வெடித்து சிதறியது. இதில், 274 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதலாக 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிறுவனமான டாடா குழுமம்  அறிவித்துள்ளது. இதன் மூலம் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1.25 ரூபாய் கோடி நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *