இந்திய பகுதிகளை அழிக்கவே பாகிஸ்தான் கடன் நிதியை பயன்படுத்துகிறது – உமர் அப்துல்லா .!

இந்திய பகுதிகளை அழிக்கவே பாகிஸ்தான் கடன் நிதியை பயன்படுத்துவதாக  ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.

ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நாணய நிதியத்திடம், பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி பாகிஸ்தான் 1 பில்லியன் டாலர் கடன் கேட்டுள்ளது. இந்த நிதியை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் பயன்படுத்துவதாக கூறி அதற்கான ஓட்டெடுப்பை புறக்கணித்தது. இருப்பினும், இந்தியாவின் எதிர்பை மீறி பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர்  கடன் வழங்குவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

இந்நிலையில்  ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது எக்ஸ் தள பக்கத்தில், பதிவிட்டுள்ளார். அதில் சர்வதேச நாணய வழங்கும் நிதியை பூஞ்ச், ரஜோரி, ஊரி உள்ளிட்ட இந்திய பகுதிகளை அழிக்கவே பாகிஸ்தான் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார். மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள இந்தப் பதற்றத்தை சர்வதேச சமூகம் குறைக்க எப்படி குறைக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *