
திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மறைவுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் விடுத்துள்ள செய்தியில், தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும், வரலாற்றுப் புகழ்மிக்க ஏவிஎம் நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த சரவணன் மறைவுக்கு வருந்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாவின் ஓர் இரவு, கருணாநிதியின் பராசக்தி, முரசொலி மாறனின் குலதெய்வம் ஆகிய படங்களை ஏவிஎம் நிறுவனம் தயாரித்ததைக் குறிப்பிட்டுள்ளார்.
சரவணனின் மறைவால் வாடும் குடும்பத்தாருக்கும் திரையுலக நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.




