Rashmika Mandanna: உதட்டோடு உதடு!

உதட்டோடு உதடு முத்தமிடும் புகைப்படம் வைரல் !

ராஷ்மிகா மந்தனாவும் ரன்பீர் கபூரும் உதட்டோடு உதடு முத்தமிடும் புகைப்படம் வைரலாகிறது.


சென்னை: ‘அனிமல்’ என்ற இந்தி படத்தில் ரன்பீர் கபூர், அனில் கபூர், பாபி தியோல் ஆகியோருடன் இணைந்து ராஷ்மிகா நடித்துள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது.

அனிமல் படத்துக்கான போஸ்டரைப் படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.


அந்தப் போஸ்டரில் ராஷ்மிகா மந்தனாவும் ரன்பீர் கபூரும் உதட்டோடு உதடு முத்தமிடும் காட்சி இடம்பெற்று உள்ளது. இந்தப் புகைப்படம் வைரலாகிறது.

இது ராஷ்மிகா ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. முத்த காட்சி போஸ்டரை வலைத்தளத்தில் வெளியிடுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ராஷ்மிகாவையும் விமர்சித்து உள்ளனர்.

இன்னும் சிலர் முத்த காட்சியில் நடித்துள்ள ராஷ்மிகாவின் துணிச்சலை பாராட்டி உள்ளனர். ராஷ்மிகா தமிழில் விஜய்யின் வாரிசு, கார்த்தியுடன் சுல்தான் படங்களில் நடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *