மேகதாது அணையை பொருத்தவரை ஒரு செங்கலை கூட கர்நாடக அரசு எடுத்து வைக்கக் முடியாது என்று வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கோவை மெட்ரோ ரயில் நிராகரிப்பு தொடர்பான கேள்விக்கு, இது குறித்து பிரதமரிடமும் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார். நாமக்கல் வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டம் நடத்தியது தொடர்பான கேள்விக்கு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் அவர்களது குறைகளை அந்த துறையின் செயலாளர் இடம் கூறி இருக்க வேண்டும் என்றார்.
மேகதாது விவகாரம் குறித்த கேள்விக்கு, மேகதாது அணையை பொருத்தவரை ஒரு செங்கலை கூட கர்நாடக அரசு எடுத்து வைக்கக் முடியாது என்று கூறினார். சிவகாசி பட்டாசு தயாரிப்பு ஆலை வடித்த விவகாரம் தொடர்பான கேள்விக்கு, விதிமுறைகளை மீறி இருக்கக்கூடிய எந்த பட்டாசு தொழிற்சாலைகளாக இருந்தாலும் அதற்கு உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்துப்பதாகவும் தெரிவித்தார்.




