காமன்வெல்த் திருவிழா – பளுதூக்கும் போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி!

Advertisements

காமன்வெல்த், பெண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் போட்டியில், பெண்களுக்கான 48 கிலோ பளுதூக்கும் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானு மொத்தம் 190 கிலோ எடையைத் தூக்கித் தங்கப் பதக்கம் வென்றார். இது இத்தொடரில் இந்தியா வெல்லும் முதல் தங்கப் பதக்கமாகும், மேலும் காமன்வெல்த் போட்டிகளில் மீராபாய் சானு தொடர்ச்சியாக வெல்லும் மூன்றாவது தங்கப் பதக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து, ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் பிரிவில் இந்தியாவிற்காகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி 126 கிலோ எடையைத் தூக்கி வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதன்மூலம், இங்கு நடைபெற்ற பளுதூக்கும் போட்டிகள் அனைத்திலும் இந்தியா குறைந்தது ஒரு பதக்கத்தையாவது உறுதி செய்தது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *