Advertisements

மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட் தொடர் போட்டியில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது.
ஹராரேயில் இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து, 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. இதில், அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்சி 81 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது.
Advertisements




