ஈரான் பேச்சுவார்த்தைக்கு ஈடுபடுவதே புத்திசாலித்தனம் – வெள்ளை மாளிகை!

ஈரான் பேச்சுவார்த்தை மூலம் ஒரு ஒப்பந்தத்தை எட்ட முயற்சிப்பதே புத்திசாலித்தனம் என்று அமெரிக்க வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குனர் ஸ்டீவன் சியுங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குனர் ஸ்டீவன் சியுங் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தூதரக ரீதியிலான தீர்வையே விரும்புவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருவதாகத் தெரிவித்தார். அதே சமயம், ஹார்முஸ் நீரிணையிலோ அல்லது நட்பு நாடுகளுக்கு எதிராகவோ ஈரான் பயங்கரவாத நடவடிக்கைகளை தொடர்ந்தால், அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் வாய்ப்பையும் அவர் கைவிடவில்லை என்று கூறினார்.
மேலும், “பேச்சுவார்த்தை மூலம் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஈரான் முயற்சிப்பதே புத்திசாலித்தனமானது இல்லையெனில், என்ன நடக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும், என்று எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *