சத்திய சாய்பாபாவைப் பின்பற்றி இலட்சக்கணக்கானோர் தொண்டு.!

சத்திய சாய்பாபாவைப் பின்பற்றி இலட்சக்கணக்கானோர் தொண்டு செய்து வருவதாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி சாய்பாபாவின் நூற்றாண்டு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டார். அப்போது உரையாற்றிய அவர், புட்டபர்த்தி சாய்பாபாவின் தன்னலமற்ற தொண்டு, இலட்சக்கணக்கானோரை அவரின் பாதையில் ஈர்த்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

உலகின் பல நாடுகளில் வாழும் சாய்பாபாவின் பக்தர்கள் ஏழைகளுக்குத் தொண்டாற்றி வருவது மனநிறைவளிப்பதாகத் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

நாடே முதன்மையானது என்ற கொள்கையின் அடிப்படையில் சாய்பாபாவின் தொண்டு நிறுவனம் செயல்படுவது, வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை எட்டப் பெரிதும் உதவும் என்றும் திரௌபதி முர்மு கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *