2வது நாளாக பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம்..!

இந்திய எல்லையில், 2வது நாளாக பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார்.

பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று இந்திய இராணுவத்தினர் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தினர்.

இதன்காரணமாக., பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் தினேஷ் குமார் என்ற ராணுவ வீரர் வீர மரணமடைந்தார்.

மேலும் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் சேத விவரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *