ஜப்பானில் ஏவுகணை சோதனை..மீண்டும் உலகில் பதற்றம்..!

Advertisements

தென் கொரியாவும், அமெரிக்காவும் சேர்ந்து ராணுவ கூட்டு பயிற்சியில் இன்று ஈடுபட்டுள்ள நிலையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் – 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி மிரட்டி உள்ளார். இந்நிலையில் , சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்கா அதிபர் டிரம்ப் பிற நாடுகளை குறிவைத்து தாக்குவது போல , வட கொரியாவை தாக்கமுடியுமா..? டிரம்ப்பால் கிம் ஜாங் உன் -யை தொட முடியுமா.? என்றலெல்லாம் இணைய தளங்களில் செய்திகள் வெளியாகின…

இந்நிலையில் , மீண்டும் வடகொரியா ஜப்பான் போன்ற உலக நாடுகளையும் சீண்டி வருகிறது… ஒருபக்கம் ஈரானை வீழ்த்த அமெரிக்காவும் , இஸ்ரேலும் களம் இறங்கி வருகின்றனர் ..இன்னொரு பக்கம், வடகொரியா அமெரிக்காவின் கழுத்தையே நெரித்து வம்பிழுத்து வருகிறது..இந்நிலையில் , இதுகுறித்த பின்னணி தகவல்களை தற்போது விரிவாக பார்க்கலாம்..

வட கொரியாவை பொறுத்தரை சீனா, ரஷ்யாவிற்கு நட்பு நாடாக உள்ளது. அதேநேரம் அமெரிக்காவிற்கு சுத்தமாக பிடிக்காத நாடாகவும் உள்ளது. அவ்வப்போது வடகொரியா தென்கொரியாவை மிரட்டும் வகையில் நடக்கும்.. பதிலுக்கு அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சி நடததும். இது வழக்கமான ஒன்று தான்.

இதனால் வடகொரியா, தென்கொரியாவை மிரட்டி வருகிறது. இதற்கிடையே தான் அமெரிக்கா, தென்கொரியாவுக்கு ஆதரவாக களமிறங்கி உள்ளது. வடகொரியா – அமெரிக்கா இடையே பகை உள்ளது. அதேவேளையில் அமெரிக்காவின் நட்பு நாடாக தென்கொரியா உள்ளது. இதனால் தான் அமெரிக்க அதிபர்கள் தென்கொரியாவிற்கு ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளன.

தென்கொரியாவின் பாதுகாப்புக்காக அமெரிக்கா இதனை செய்துள்ளது. இது வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னை கோபப்படுத்தி உள்ளது. இதனால் அவ்வப்போது அமெரிக்கா, தென்கொரியாவை மிரட்டும் வகையில் ஏவுகணை சோதனைகளை கிம் ஜாங் உன் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தான் இன்று அமெரிக்காவும், தென்கொரியா வீரர்களும் இணைந்து ராணுவ கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவும், தென்கொரியாவும் சேர்ந்து Freedom Shield என்ற பெயரில் கூட்டு பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இந்த பயிற்சி வரும் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த பயிற்சியின்போது இருநாட்டின் வீரர்களும் தங்களின் செயல்பாட்டு திறன்களை மேம்படுத்துவது உள்பட கணினி சார் டெக்னாலஜி சார்ந்த ஒத்துழைப்பை சிறப்பாக மேற்கொள்வதை அடிப்படையாக கொண்டு செயல்படுவார்கள். அதோடு இருநாடுகளின் வீரர்களும் ‘வார்ரியர் ஷீல்ட்’ எனும் களப்பயிற்சியையும் மேற்கொள்வார்கள். இந்த பயிற்சின்போது தான் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளார்.

அதாவது வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கின் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே உள்ள சுனான் பகுதியிலிருந்து கிம்ஜாங் உன் உத்தரவில் 10 ஏவுகணைகள் திடீரென்று ஏவப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை ஜப்பானில் போய் விழுந்துள்ளது.  இதனிடையே இந்த ஏவுகணை சோதனைக்குப் பிறகு பேசிய கிம் ஜாங் அன், “நமது நாடு எப்போதுமே வலிமையான மற்றும் நம்பகமான அணுஆயுதத் தற்காப்புத் திறனுடன் இருக்க வேண்டும்.

எதிரிகளின் எந்தவொரு அச்சுறுத்தலையும் முறியடிக்க நமது கடற்படை தயாராக இருப்பதை இந்த சோதனை நிரூபித்திருக்கிறது” என்றார். இதற்கிடையே கிம் ஜாங் அன்-னின் சகோதரி கிம் யோ ஜாங் தனது அறிக்கையில், எதிரிகள் எங்கள் வலிமையை விரைவில் உணர்வார்கள்” என மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கி உள்ளதாக எச்சரித்தார்..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *