இமாச்சலப்பிரதேசத்தில் இன்று ஐ.பி.எல். போட்டிகளை நடத்த பிசிசிஐக்கு அரசு அனுமதி

இமாச்சலப்பிரதேசத்தில் இன்று நடைபெறவுள்ள, ஐ.பி.எல். போட்டிகளை நடத்த பிசிசிஐக்கு இந்திய அரசு அனுமதியளித்துள்ளது.

இந்திய பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று, இமாச்சலப்பிரதேசம் தரம்சாலாவில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் போட்டி ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இந்த போட்டியை நடத்த பிசிசிஐக்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே மே 11ம் தேதி தரம்சாலாவில் நடைபெறவுள்ள மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் இடையே ஆன ஐ.பி.எல். போட்டிகள் மும்பைக்கு மாற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *