நெருக்கடி நிலையின் கொடுமைகளை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் – பிரதமர் நரேந்திர மோடி

நெருக்கடி நிலையின் கொடுமைகளை மக்களுக்கு எடுத்துரைத்து அரசியலமைப்பை விழிப்புடன் காக்க வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

2014ஆம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றது முதல், மனத்தின் குரல் என்னும் பெயரில் மாதந்தோறும் வானொலியில் உரையாற்றி வருகிறார்.

இன்று வானொலியில் உரையாற்றிய அவர், 1975ஆம் ஆண்டு நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்த பின் மக்களும் தலைவர்களும் அடைந்த இன்னல்களை எடுத்துரைப்பது சனநாயகத்தைக் காக்க வேண்டியதன் விழிப்புணர்வை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டார்.

அந்தக் காலத்தில் ஜார்ஜ் பெர்னாண்டசுக்குக் கைவிலங்கிட்டு இரும்புச் சங்கிலியால் பூட்டி இழுத்துச் சென்றதையும் பிரதமர் நினைவுகூர்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *