சீனாவில் பிரதமர் மோடி-ரஷ்ய அதிபர் புதினும் சந்திப்பு!

சீனாவில் வருகின்ற 1 ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் புதினைச் சந்திக்க உள்ளார்.

சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு வருகின்ற 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட இருபது உலக தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

பின்னர் மாநாடு முடிந்தவுடன் ரஷ்ய அதிபரைப் பிரதமர் மோடி சந்தித்துப் பேச உள்ளாரெனக் கிரெம்ளின் மாளிகையின் வெளிநாட்டு கொள்கை ஆலோசகர் யுரி உஷா கோவ் தெரிவித்தார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, இந்த ஆண்டு இறுதியில் எங்கள் அதிபர்  இந்தியாவிற்கு வர உள்ளாரெனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *