சேலம் அணிக்கு எதிரான போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி

Advertisements

சேலம் அணிக்கு எதிரான போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

9-வது டி.என்.பி.எல். தொடர் வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் நடைபெற்ற 17-வது லீக் ஆட்டத்தில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து, 160 ரன்கள் அடித்தது. இதனையடுத்து 161 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, 16.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது, இதன்மூலம் சேலம் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, டி.என்.பி.எல். 2025 தொடரின் தனது 5-வது தொடர் வெற்றியை பதிவு செய்துடன் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *