தொகுதி மறுவரையரை கூட்டத்தை புறக்கணித்த அதிமுக , பாமக… 20 எம்பிக்கள் மட்டுமே.?

Advertisements

தமிழகத்தில் தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாகத் தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் அனைத்து எம்பிக்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், தொடக்கத்திலிருந்தே இக்கூட்டத்தில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

காவிரி நீர் பிரச்சினையைத் திசை திருப்புவதற்காகவே முதல்வர் இந்தக் கூட்டத்தைக் கூட்டியுள்ளதாகக் குற்றம்சாட்டி திமுக இக்கூட்டத்தைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்காது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாமகவும் இந்த கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது  திமுக மற்றும் அதிமுகவின் இந்த அதிரடிப் புறக்கணிப்பால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 12 எம்பிக்கள், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த தலா 2 எம்பிக்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக கட்சிகளைச் சேர்ந்த தலா 1 எம்பி என மொத்தம் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தின் மிக முக்கியமான ஒரு உரிமைப் பிரச்சினையில் பெரும்பான்மையான முக்கியக் கட்சிகள் இக்கூட்டத்தைத் தவிர்த்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *