
மிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வருகின்ற 17 ஆம் தேதி முதல் மக்கள் சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளார்.
மதுரையில் இராண்டாவது மாநாட்டை நிறைவு செய்துள்ள தமிழக வெற்றிக் கழகம் தேர்தலுக்கான அடுத்தக்கட்ட பயணத்தை நோக்கி நகர தொடங்கியுள்ளனர். இதில் வருகின்ற 17 ஆம் தேதி மக்களைச் சந்திக்க உள்ளாரெனத் த.வெ.கத்தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார். மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவரான தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி ஈரோட்டிலிருந்து முதல் மக்கள் சந்திப்பை நடத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்காக இன்று பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக கட்சி அலுவலகத்தில் அக்கட்சித் தலைவர் விஜய் மாவட்ட செயலாளர்களுடனும், நிர்வாகிகளுடனும் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயண விவரம்குறித்த பட்டியல் வெளியிடப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.


