
உக்ரைன் மீது ரஷிய வான்வழித் தாக்குதலில் 23 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உக்ரைன் அதிரபர் வொலோதிமீா் ஜெலென்ஸ்கி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்
உக்ரைனில் கீவ் மற்றும் மேற்கு உக்ரைனின் பல பகுதிகளில் 598 ட்ரோன்கள் மற்றும் 31 ஏவுகணைகளை ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், குழந்தைகள் உள்பட 23 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 48-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து, ஐரோப்பிய யூனியன் அலுவலகங்கள், பிரிட்டிஷ் கவுன்சில் கட்டடங்கள் சேதமடைந்தன. இந்தத் தாக்குதலில் யாரும் காயமடையவில்லை என்று ஐரோப்பிய யூனியனும், பிரிட்டனும் கூறியுள்ளது.
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்புடன் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், நேரடி பேச்சுவாா்த்தை நடத்திய பிறகு நடைபெற்றுள்ள மிகப் பெரிய தாக்குதல் இது என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கொடூரமான தாக்குதல் என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஜெலென்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைனின் ராணுவ தொழில் வளாகத்தில் உள்ள ராணுவ விமான தளங்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியதாக ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

