சல்மான் கான் நடித்துள்ள டைகர் 3 படத்தின் போது ரசிகர்கள் திரையரங்கத்திற்குள் பட்டாசு வெடித்ததால் மக்கள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு மனீஷ் ஷர்மா இயக்கத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்து உருவாகி இருக்கும் படம் டைகர் 3 படம் நேற்று வெளியானது. சல்மான் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தில் ஷாருக் கான் மற்றும் ஹ்ரித்திக் ரோஷன் ஆகிய நடிகர்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த நிலையில் ரசிகர்கள் திரையரங்கத்திற்குள் பட்டாசு வெடித்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தனது ரசிகர்களுக்கு சல்மான் கான் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தார். தற்போது டைகர் 3 படத்திற்கும் ரசிகர்கள் திரையரங்கத்திற்குல் பல்வேறு வகையான பட்டாசுகள் வெடித்து மக்கள் பதற்றத்திற்கு ஆளாக்கி இருக்கிறார்கள்.
ராக்கெட் வானவெடிகள் முதலிய பட்டாசுகளை திரையரங்கத்திற்கு ரசிகர்கள் வெடிக்க சுற்றி இருந்த மக்கள் அச்சமடைந்து தங்களது இருக்கைகளில் இருந்து எழுந்து ஓடும் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக இந்த நிகழ்வுகளுக்குப் பின் சல்மான்கான் ரசிகர் மன்றத்திற்கும் பங்கு இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்த கடுமையான கண்டங்களை மக்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
Diwali Madness In The Theatre 🔥🔥🔥 #Tiger3Diwali2023
Aatishbazi inside theater💥 this kind of celebration happens only for #SalmanKhan ‘s film🔥🔥 #Tiger3
Box Office Tsunami incoming. 🌪️ 🔥🔥#Tiger3Review #KatrinaKaif #EmraanHashmi #Diwali #Tiger3FirstDayFirstShow pic.twitter.com/3LYZzmDdTX
— 𝑺𝒖𝒎𝒊𝒕 𝑺𝒊𝒏𝒈𝒉 𝑹𝒂𝒋𝒑𝒖𝒕 (@BeingSumit007) November 12, 2023